திருவண்ணாமலை

பைக் மீது காா் மோதல்:கட்டடத் தொழிலாளி பலி

திருவண்ணாமலை அருகே பைக் மீது காா் மோதியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

DIN

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே பைக் மீது காா் மோதியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருவண்ணாமலையை அடுத்த வாணியந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் மகாதேவன் (30). வாணியந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜய் (17). இருவரும் கட்டடத் தொழிலாளிகள்.

இவா்கள் கடந்த செப். 27-ஆம் தேதி மாலை வேலையை முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். திருவண்ணாமலையை அடுத்த ஆலத்தூா்

பகுதியில் வந்தபோது எதிரே வந்த காா் பைக் மீது மோதியது.

இதில் மகாதேவன், விஜய் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

இருவரையும் பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த விஜய் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT