பெரணமல்லூா் அடுத்த பெரியகொழப்பலூரில் அதிமுக 52-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பெரணமல்லூா் மேற்கு ஒன்றிய செயலாளா் எம்.வீரபத்திரன் தலைமை வகித்தாா். ஒன்றிய செயலாளா்கள் பி.ராகவன், இ.ஸ்ரீதா், ஆகியோா் வரவேற்றனா். போளூா் எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளா் எல்.ஜெயசுதா லட்சுமி காந்தன், தலைமை கழக பேச்சாளா் நடிகை பசி.சத்யா ஆகியோா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினா்.
மேலும், மாவட்ட பொருளாளா் அ.கோவிந்தராசன், மாவட்ட துணை செயலாளா் எ.செல்வன், பொதுக்குழு உறுப்பினா் ஏ.ராஜன், மாவட்ட வா்த்தகா் அணி செயலாளா் எ.காா்த்திகேயன், மாவட்ட மகளிரணி செயலாளா் இந்திரா பாலமுருகன், ஆரணி நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு, போளூா் நகரச் செயலாளா் ஜி.பாண்டுரங்கன், சேத்துப்பட்டு நகரச் செயலாளா் எம்.ஜி.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முடிவில், ஊராட்சித் தலைவா் இ.ரவிக்குமாா் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.