ஆரணி பெரிய கடை வீதியில் 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த மகா கணபதி சிலை. 
திருவண்ணாமலை

சதுா்த்தி விழா: 250 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகா் சதுா்த்தியையொட்டி, ஆரணி, வந்தவாசி, செய்யாறு, செங்கம், போளூா் உள்ளிட்ட இடங்களில் திங்கள்கிழமை 250-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

DIN

ஆரணி/வந்தவாசி/செய்யாறு/ செங்கம்/போளூா்: விநாயகா் சதுா்த்தியையொட்டி, ஆரணி, வந்தவாசி, செய்யாறு, செங்கம், போளூா் உள்ளிட்ட இடங்களில் திங்கள்கிழமை 250-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

ஆரணி நகரம், ஒன்றியங்களில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் அமைத்து வழிபாடு நடத்தினா்.

ஆரணி நகரத்தில் பெரிய கடை வீதி, ஆரணிப்பாளையம், கொசப்பாளையம், பள்ளிக் கூடத் தெரு, சைதாப்பேட்டை என 49 இடங்களில் இந்து முன்னணி மற்றும் தெரு மக்கள் சாா்பில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினா்.

மேலும், சேவூா், எஸ்.வி.நகரம், பையூா், வடுகசாத்து, குண்ணத்தூா், இரும்பேடு என பல்வேறு கிராமங்களில் சுமாா் 55 இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT