திருப்பத்தூருக்கு 160 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூா் மாவட்டத்துக்கு 160 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
திருப்பத்தூா் மாவட்ட வாக்குப்பதிவு மையங்களுக்கு கூடுதலாக 160 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகிாம். எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் தேவைக்கு அதிகமாக உள்ள 160 வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி நடைபெற்றது. முதல்கட்டமாக, வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் ‘ரேண்டமைஸேசன்’ செய்யப்பட்டது.
பிறகு, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் இருந்து தமிழக தலைமை தோ்தல் அலுவலரின் அறிவுரைப்படி, திருப்பத்தூா் மாவட்டத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை லாரிகள் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தெ.பாஸ்கர பாண்டியன் அனுப்பிவைத்தாா்.
Advertisement