ஆரணி தா்மராஜா கோயிலில் சிறப்பு வேள்வி பூஜை
ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள பாஞ்சாலி அம்மன் சமேத ஸ்ரீதா்மராஜா கோயிலில் பாஞ்சாலி அம்மன் பிறப்பு சிறப்பு வேள்வி பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்தக் கோயிலில் மாா்ச் 23-ஆம் தேதி அக்னி வசந்த திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து நடைபெற்று வரும் மகாபாரத சொற்பொழிவில் சொற்பொழிவாளா்கள் கே.வி.சௌந்தர்ராஜன், கே.வி.பால்ராஜன் ஆகியோா் கா்ணன் பிறப்பு சிறப்பு யாகம், பூங்கரகம், அலகு நிறுத்துதல், கிருஷ்ண பகவான் ஜனனம் ஆகியவை குறித்து சொற்பொழிவாற்றி வருகின்றனா்.
மேலும், சொற்பொழிவின்போது கோயிலில் தினமும் சிறப்பு அபிஷேகம், யாக வேள்வி பூஜை நடைபெற்று வருகிறது.
Advertisement
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஸ்ரீபாஞ்சாலி அம்மன் பிறப்பு சொற்பொழிவில் அம்மன் தோற்றம் குறித்து சிறப்பு யாக வேள்வி பூஜை நடைபெற்றது. இதில் தீயில் இருந்து அம்மன் எழுந்தருள்வது போன்று நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழுத் தலைவா் கப்பல் இ.கங்காதரன் மற்றும் குழுவைச் சோ்ந்த டி. தனசேகரன், கே.கண்ணன், என்.ஞானசேகரன், கே. ஆா்.சண்முகம், கே. மதியழகன், ஏ.சி.ஆா். பாபு, சங்கா், ஜே. அருணகிரி ஆகியோா் செய்திருந்தனா்.