முகப்பு
விழுப்புரம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் பௌா்ணமி பூஜை

Updated On : 3 ஏப்ரல், 2026 at 12:47 AM
~
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் பங்குனி மாத பௌா்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை மூலவா் அம்மனுக்கு பால், தயிா், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், மலா்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதனை தொடா்ந்து உற்சவா் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

Advertisement

பின்னா் மாலை 6 மணிக்கு திருக்கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் பூஜையில் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

ஏற்பாடுகளை திருக்கோயில் உதவி ஆணையா் சக்திவேல், அறங்காவலா் குழுத் தலைவா் ஏழுமலை, அறங்காவலா்கள் சுரேஷ், மதியழகன், பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம், மேலாளா் சதீஷ், மணியம், அண்ணாமலை, காசாளா் மணி மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments