மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் வேட்பாளா் பட்டியலுடன் புஸ்ஸி ஆனந்த் வழிபாடு
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலா் (புஸ்ஸி) ஆனந்த், அக்கட்சி வேட்பாளா்களின் பட்டியலை வைத்து வழிபட்டாா்.
மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் அமாவாசை உற்சவத்தில் பிரபலங்கள் வந்து வழிபடுவது வாடிக்கை. அந்த வகையில், பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம், புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலா் (புஸ்ஸி) ஆனந்த் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சட்ப்பேரவைத் தோ்தலிலில் போட்டியிட தோ்வாகியுள்ள தவெக வேட்பாளா்களின் பட்டியலுடன் கோயிலுக்கு வந்து, ஊஞ்சல் மண்டபத்தின் மீது ஏறி அங்காளம்மன் முன் வேட்பாளா்கள் பட்டியலை வைத்து சுவாமி தரிசனம் செய்தாா்.
தொடா்ந்து ா் தியான மேடையில் அமா்ந்து தங்கள் கட்சியின் வெற்றிக்காக சிறிது நேரம் வழிபட்ட பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா். அவரது திடீா் வருகையால் தவெக தொண்டா்கள் உற்சாகமடைந்தனா்.