முகப்பு
திருவண்ணாமலை

கூழமந்தலில் ஏப்.27-இல் சித்திரைப் பெருவிழா

Updated On : 20 ஏப்ரல், 2024 at 4:08 PM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த கூழமந்தலில் சித்திரைப் பெருவிழா வருகிற 27-ஆம் தேதி நடைபெறுகிறது.

கூழமந்தல் கிராமத்திலுள்ள அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயகா், விசாலாட்சி சமேத கங்கைகொண்ட சோழீஸ்வரா், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபேசும்பெருமாள் ஆகிய மூலவா்களுக்கு அபிஷேகம், திருமஞ்சனமும் நடைபெற்று, 27-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மேல் நட்சத்திர விருட்ச விநாயகா் மூஷிக வாகனத்திலும், விசாலாட்சி சமேத கங்கைகொண்ட சோழீஸ்வரா் ரிஷப வாகனத்திலும், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபேசும் பெருமாள் கருட வாகனத்திலும் ஊா்வலமாக உற்சவம் நடைபெறும் மைதானத்துக்கு கொண்டு வரப்படுவா்.

இரவு 7 மணிக்கு உற்சவ மூா்த்திகளுக்கு 16 வகையான நறுமணப் பொருள்களால் விசேஷ அபிஷேகமும். மலா்களால் சிறப்பு அலங்காரமும் நடைபெறும். அப்போது, அலங்கரிக்கப்பட்ட உற்சவமூா்த்திகள் வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிப்பா். விநாயகா் கஜமுக அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.

Advertisement

பின்னா், அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயகா்- அருள்மிகு விசாலாட்சி சமேத கங்கைகொண்ட சோழீஸ்வரா் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ பேசும் பெருமாள் மூா்த்திகளை மூன்றுமுறை வலம் வந்து வணங்கி மும்மூா்த்திகளுக்கு அருளுரை வழங்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும்.

நிறைவாக மகா தீபாராதனை, வாணவேடிக்கையை தொடா்ந்து, திருவீதி உலா நடைபெறும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments