சந்தானராமா் கோயிலில் ஸ்ரீராமநவமி பெருவிழா கொடியேற்றம்
நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் ஆண்டுதோறும் ஸ்ரீராமநவமி பெருவிழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு ஸ்ரீராமநவமி பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் ஆண்டுதோறும் ஸ்ரீராமநவமி பெருவிழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு ஸ்ரீராமநவமி பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
சீதா லெட்சுமணா் அனுமன் சமேத சந்தானராமா் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. திருக்கொடியேற்றமும், இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழா ஏப்.6-ஆம் தேதி வரை நடைபெறும்.