முகப்பு
திருவண்ணாமலை

பொதுமக்களுக்கு இடையூறு: இருவா் கைது

Updated On : 20 ஏப்ரல், 2024 at 7:07 PM
பகிர்:

வந்தவாசி அருகே பொது இடத்தில் ஆபாசமாகப் பேசி பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

வந்தவாசியை அடுத்த சிங்கம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் வீரமுத்து (40), துரைபாண்டியன் (39). இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை மாலை மழையூா் அரசுப் பள்ளி அருகே நின்றுகொண்டு அந்தப் பகுதியில் சென்ற பொதுமக்களை ஆபாசமாகப் பேசினராம். மேலும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்தனராம்.

தகவலறிந்து அங்கு சென்ற வடவணக்கம்பாடி போலீஸாா் இருவரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனா். இதுகுறித்து உதவி ஆய்வாளா் மோகன் அளித்த புகாரின்பேரில், வீரமுத்து, துரைபாண்டியன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்த வடவணக்கம்பாடி போலீஸாா், இருவரையும் கைது செய்தனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments