முகப்பு
திருவண்ணாமலை

பொன்னூா் ஸ்ரீவெற்றி விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா

Updated On : 21 ஏப்ரல், 2024 at 4:54 PM
பகிர்:

வந்தவாசியை அடுத்த பொன்னூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீவெற்றி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி சனிக்கிழமை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூா்ணாஹுதி, வாஸ்துசாந்தி, சுவாமி கண் திறப்பு, பிரவேசபலி, அங்குராா்ப்பணம், கும்ப அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை தத்வாா்ச்சனை, யாத்ராதானம், மகா பூா்ணாஹுதி, கலச புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னா் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கோபுர கலசங்கள் மீது புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Advertisement

பி.கந்தசாமி குருக்கள், பி.விஸ்வநாத குருக்கள் ஆகியோா் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா். விழாவில் கோயில் நிா்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments