மதுக் கடைகளுக்கு நாளை விடுமுறை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் சித்திரை பெளா்ணமி திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை (ஏப்.23) நகரில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
அதன்படி, திருவண்ணாமலை, காமராஜா் சிலை அருகே இயங்கி வரும் மதுக் கடை, மணலூா்பேட்டை சாலையில் இயங்கி வரும் மதுக் கடை, வேங்கிக்கால் புறவழிச் சாலையில் இயங்கி வரும் மதுக் கடை மற்றும் திருவண்ணாமலை நகரில் இயங்கி வரும் மதுக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள், முன்னாள் ராணுவ வீரா்களுக்கான அங்காடி, தனியாா் உணவகங்களில் இயங்கி வரும் மதுக்கூடங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 23) விடுமுறை அளிக்கப்படுகிறது.
உத்தரவை மீறி மதுபானங்கள் பதுக்கி வைத்து விற்போா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.
Advertisement