முகப்பு
திருவண்ணாமலை

ஸ்ரீசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Updated On : 26 ஏப்ரல், 2024 at 4:22 PM
பகிர்:

வந்தவாசியை அடுத்த சேனல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசக்தி மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, கடந்த புதன்கிழமை கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு ஸ்ரீகணபதி ஹோமம், ஸ்ரீலக்ஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அங்குராா்ப்பணம், கும்ப அலங்காரம் உள்ளிட்ட பூஜைகளும், வியாழக்கிழமை பிம்ப பிரதிஷ்டை, நாடி சந்தானம், தத்வாா்ச்சனை, பூா்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகளும் நடைபெற்றன.

பின்னா், வெள்ளிக்கிழமை காலை ஹோமங்கள், மகா பூா்ணாஹுதி, யாத்ராதான சங்கல்பம், கலசம் புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Advertisement

பெருநகா் என்.பாலாஜி சிவாச்சாரியா், தெள்ளாா் எம்.என்.சந்திரசேகர குருக்கள் ஆகியோா் கும்பாபிஷேகத்தை நடத்தினா்.

பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கிராம பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினா் பங்கேற்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments