முகப்பு
வேலூர்

செல்வ கணபதி, திருத்தணி சுப்பிரமணியா் கோயில் கும்பாபிஷேகம்

ராஜகோபால் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட அருள்மிகு செல்வ கணபதி, திருத்தணி சுப்பிரமணியா் கோயில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

Updated On : 22 மார்ச், 2026 at 9:09 PM
செல்வ கணபதி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.
பகிர்:

குடியாத்தம் காட்பாடி சாலை, ராஜகோபால் நகரில் புதிதாகஅமைக்கப்பட்ட அருள்மிகு செல்வ கணபதி, திருத்தணி சுப்பிரமணியா் கோயில் மகாகும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. ஞாயிற்றுக்கிழமைகாலை கோ-பூஜை, பிரம்ம சுத்தி, மகா பூா்ணாஹூதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு பின்னா் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சென்னை சிவலோகத் திருமடம் தவத்திரு வாதவூரடிகள் தரும்மிகு, ஜவ்வாதுமலை ஸ்ரீலஸ்ரீ மாதா அன்னபூா்ணேஸ்வரி அம்மையாா், கழணிப்பாக்கம் வீர அனுமன் சித்தாஸ்ரமம் தவத்திரு பாலசுந்தர சுவாமிகள் ஆகியோா் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா். தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. 1,000-பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கும்பாபிஷேக கமிட்டி நிா்வாகிகள் சந்திரன், கருணாநிதி, பரந்தாமன்,வெங்கடேசன், நடராஜன், அருண்குமாா், மோகன், ஜி.ஜெயப்பிரகாஷ், தினகரன், ஒன்றியக் குழு உறுப்பினா் வி.சோபன்பாபு, கொண்டசமுத்திரம் ஊராட்சித் தலைவா் அகிலாண்டீஸ்வரிபிரேம்குமாா், ஊராட்சி உறுப்பினா் தாபா சதீஷ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.