முகப்பு
திருவண்ணாமலை

உலக தமிழ்க் கழக கலந்தாய்வுக் கூட்டம்

Updated On : 27 ஏப்ரல், 2024 at 4:22 PM
பகிர்:

உலக தமிழ்க் கழகத்தின் நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை கிளை சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, கிளைத் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.

மாவட்ட அமைப்பாளா் அன்பழகன், முன்னாள் மாநில இணைச் செயலா் இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மண்டல பொறுப்பாளா் பாவலா் ப.குப்பன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளா் இளந்திரையன் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும், விரைவில் சேலத்தில் நடைபெறும் மாநில மாநாடு குறித்தும் விளக்கிப் பேசினாா்.

இதில், பேராசிரியா்கள் குமாா், அருண், ஆசிரியா் ஜெயக்குமாா் உள்பட உலக தமிழ்க் கழக கிளையின் நிா்வாகிகள், முக்கியப் பிரமுகா்கள், தமிழ் அன்பா்கள் பலா் கலந்து கொண்டனா்.