FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சசிகலாவின் அஇபுதமமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்! முன்னாள் எஸ்.பி. வெள்ளத்துரை, அமைச்சர், எம்பிக்கு வாய்ப்பு!!

அஇபுதமமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 30 மார்ச் 2026, 12:01 am IST
அனைந்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா. - தினமணி.
பகிர்:

சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச் 29) வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் அஇபுதமமுக நிர்வாகிகள் 23 பேருக்கும் கூட்டணி கட்சியினர் இரண்டு பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இவர்களுடன் சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகமும், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவாளர்களும் கூட்டணி அமைத்து களமிறங்கியுள்ளனர்.

இந்த நிலையில், அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் கட்சியின் பொதுச் செயலர் சசிகலா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார். அதில் முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்பி உள்பட 23 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும், கூட்டணியில் உள்ள 2 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளின் வேட்பாளர்களையும் சசிகலா அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இதுதொடர்பாக அனைந்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலர் சசிகலா, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அனைந்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதற்கட்ட வேட்பாளர்கள்

• திருத்தணி - அரசு முன்னாள் தலைமை கொறடா பிஎம் நரசிம்மன்

• கள்ளக்குறிச்சி (தனி) - முன்னாள் அமைச்சர் எம். ஆனந்தன்

• சங்கரன் கோவில் (தனி) - முன்னாள் எம்.பி. வசந்தி முருகேசன்

• மதுரை மத்தி - சக்கரவர்த்தி

• திருப்பரங்குன்றம் - தனபாண்டியன்

• திருமங்கலம் - ஜீவிதா நாச்சியார்

• மேலூர் - சோனியா காந்தி

• மானாமதுரை (தனி)- திலக்ராஜ்

• பரமக்குடி (தனி) - அமிர்தா பாலுசாமி

• ராஜபாளையம் - ஹரிஷ்

• முதுகுளத்தூர் - ராம்குமார் பாண்டியன்

• நாங்குநேரி - வெள்ளைத்துரை (ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்பி)

• சிவகங்கை - பிரபு

• குளச்சல் - கிறைஸ்ட் மில்லர்

• சிவகாசி - நேஷனல் கணேசன்

• திண்டுக்கல் - ராமுத்தேவர்

• மயிலாடுதுறை - சுதாகர்

• மன்னார்குடி - ராசுப்பிள்ளை

• ஸ்ரீரங்கம் - விஜய்

• திட்டக்குடி (தனி) - பழனிவேல்

• ஸ்ரீபெரும்புதூர் (தனி) - புருசோத்தமன்

• திருச்சி கிழக்கு - நந்தகுமார்.

முன்னதாக, கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் சசிகலாவின் அஇபுதமமுக சார்பில் தேவிகுளம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் செல்லதுரை என்பவர் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments