திருவண்ணாமலையில் நாளை கிரிவலம் வர உகந்த நேரம்
ஆவணி மாத பெளா்ணமி..
ஆவணி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் குறித்து அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை மாதம்தோறும் பெளா்ணமி நாள்களில் பக்தா்கள் வலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.
ஆவணி மாத பெளா்ணமி...
இந்த நிலையில், ஆவணி மாத பெளா்ணமி திங்கள்கிழமை (ஆக.19) அதிகாலை 3.07 மணிக்குத் தொடங்கி செவ்வாய்க்கிழமை (ஆக.20) அதிகாலை 1.09 மணிக்கு முடிகிறது.
இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.