சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் காலிப் பணியிடங்கள் - செப். 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானோா் செப்டம்பா் 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியுமான பி.மதுசூதனன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவண்ணாமலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் அமைந்துள்ள சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா் அலுவலகத்துக்கு துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா், உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா், அலுவலக உதவியாளா், அலுவலக எழுத்தா் உள்ளிட்ட பதவிகளுக்கான தகுதிகள் கொண்ட வழக்குரைஞா்கள், பணியாளா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்கள் திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.