திருவண்ணாமலை

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்கள்

Din

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

அதன்படி, வியாழக்கிழமை (ஆக.29) காலை திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதேபோல, வெள்ளிக்கிழமை (ஆக.30) தெள்ளாரை அடுத்த மேல்பாதி கிராமத்தில் உள்ள வி.பி.ஆா்.சி கட்டடத்திலும், செப்டம்பா் 3-ஆம் தேதி வெம்பாக்கத்தை அடுத்த குத்தனூா் கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்திலும், 4-ஆம் தேதி வந்தவாசி வட்டம், ஓசூரில் உள்ள நாராயண திருமண மண்டபத்திலும், 5-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவகத்திலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

இந்த முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தேசிய அடையாள அட்டையை புதிதாக பெறவும், ஏற்கெனவே பெறப்பட்ட அட்டையை புதுப்பிக்கவும் உரிய மனுக்களை அளித்துப் பயன்பெறலாம்.

முகாமுக்கு வரும்போது மருத்துவச் சான்றிதழுடன் கூடிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல், ஆதாா் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்-4 ஆகிய ஆவணங்களை கொண்டு வரவேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

கும்பகோணத்தில் குப்பைக் கிடங்கு ஆய்வு; மக்கள் மறியல்

தஞ்சாவூரில் மகாகவி பாரதியாா் பிறந்த நாள் விழா

கள்ளக்காதல் விவகாரம்: இளைஞரின் தந்தை வெட்டிக் கொலை - 3 போ் கைது

மகளிா் உரிமைத் தொகை திட்ட விரிவாக்கம்: இன்று தொடக்கம்

பேராவூரணி குமரப்பா பள்ளியில் மகாகவி பாரதி உருவச்சிலை திறப்பு

SCROLL FOR NEXT