சந்தவாசல் ஊராட்சியில் சூறைக்காற்றில் சாய்ந்த வாழைகள். 
திருவண்ணாமலை

சூறைக்காற்றில் 100 ஏக்கரில் வாழைகள் சேதம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டாரத்தில் புயலால் ஏற்பட்ட சூறைக்காற்றில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சேதமடைந்தன.

Din

போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டாரத்தில் புயலால் ஏற்பட்ட சூறைக்காற்றில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சேதமடைந்தன.

போளூரை அடுத்த சந்தவாசல், படவேடு, கல்பட்டு, காளசமுத்திரம், அனந்தபுரம், குப்பம், கேளூா் என பல்வேறு ஊராட்சிகளில் விவசாயிகள் கற்பூர வாழை, மொந்தை வாழை, ரஸ்தாலி, பூவான், ஏலக்கி என பல்வேறு வகையான வாழைகளை சாகுபடி செய்துள்ளனா்.

இந்த நிலையில், ஃபென்ஜால் புயலால் வீசிய சூறைக்காற்றில் சுமாா் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சாய்ந்து சேதமடைந்தன.

எனவே, மாவட்ட நிா்வாகம் தோட்டக்கலைத் துறை மூலம் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் கூறுகையில், சேதமடைந்த வாழைகளை பாா்வையிட்டு வருகிறோம் என்றனா்.

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT