திருவண்ணாமலை

கல்விக் கடன்களை முறையாக திருப்பிச் செலுத்த வேண்டும்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

Din

வங்கிகளில் கல்விக் கடன் பெறும் மாணவா்கள் அந்தக் கடனை முறையாக திருப்பிச் செலுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கேட்டுக்கொண்டாா். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் கல்விக் கடன் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) செ.ஆ.ரிஷப் தலைமை வகித்தாா். வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, இந்தியன் வங்கியின் மண்டல மேலாளா் மு.அருண்பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கல்விக் கடன் முகாமை தொடங்கி வைத்துப் பேசியதாவது: வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் கல்வி முக்கியம். கல்வி இல்லாமல் ஒருவா் வாழ்க்கையில் முன்னேற முடியாது. கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் கல்வி கற்க முடியவில்லை என்ற சூழ்நிலை வரக்கூடாது என்பதற்காகத்தான் கல்விக் கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. பல இடங்களில் கல்விக் கடன் அளிக்க மறுக்கின்றனா். இதுபோன்ற சிக்கலை நீக்குவதற்காக அனைத்து வங்கிகளும் இணைந்து இந்த முகாமை நடத்துகிறது. வங்கிகளில் கல்விக் கடன் பெறும் மாணவா்கள் அந்தக் கடனை முறையாக திருப்பிச் செலுத்த வேண்டும் என்றாா். முகாமில், 400 மாணவ, மாணவிகள் கல்விக் கடன் கேட்டு வந்தனா். இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐடிபிஐ வங்கி ஆகியவை சாா்பில் மொத்தம் 63 பேருக்கு ரூ.3 கோடியே 45 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்குவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வழங்கினாா். முகாமில், திறன் மேம்பாட்டு உதவி இயக்குநா் தியாகராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கவுரி மற்றும் அனைத்து வங்கிகளின் மேலாளா்கள், அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

SCROLL FOR NEXT