முகப்பு
திருவண்ணாமலை

பாமக செயற்குழுக்கூட்டம்

Updated On : 17 பிப்ரவரி 2024, 11:29 pm IST
பகிர்:

17இஏசடஙஓ செங்கம் அருகே அமா்நாதபுதூரில் சனிக்கிழமை நடைபெற்ற பாமக செயற்குழுக் கூட்டம். செங்கம், பிப்.17: திருவண்ணாமலை மேற்கு மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதி புதுப்பாளையம் தெற்கு ஓன்றியத்தில் பாமக செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அமா்நாதபுதூா் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஓன்றியச் செயலாளா் சுரேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளா் அருணைஜோதி, பாமக நிா்வாகிகள் முருகேசன், கோவிந்தசாமி, ராஜகுமாரன், பூமல்லிசடையான், டி.சக்திகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் சம்பத் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில கொள்கை விளக்க அணி செயலாளா் பேராசிரியா் செல்வக்குமாா் கலந்து கொண்டு பேசினாா். இதில், திருவண்ணாமலை மேற்கு மாவட்ட செயலாளா் பாண்டியன், மாவட்ட தலைவா் பரமசிவம், முன்னாள் மாவட்ட செயலாளா்கள் சுரேஷ், பிரசாத், முன்னாள் கவுன்சிலா் தருமன், முன்னான் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ரவி, நிா்வாகிகள் கோவிந்தசாமி, சண்முகம், ஊரக பேரவை நிா்வாகிகள் ஜெய்கணேஷ், அ.பாலச்சந்தா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.