முகப்பு
திருவண்ணாமலை

முருகன் கோயிலில் கிருத்திகை வழிபாடு

Updated On : 17 பிப்ரவரி 2024, 5:44 am IST
பகிர்:

செங்கம் அருகேயுள்ள மண்மலை முருகன் கோயிலில் கிருத்திகை வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செங்கம்-திருவண்ணாமலை சாலை மண்மலை பகுதியில் முருகன் கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலில் மாசி மாத கிருத்திகை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, சுவாமிக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு மண்மலையை சுற்றி வந்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.