முகப்பு
திருவண்ணாமலை

ஆரணி நகர காவல் ஆய்வாளருக்கு பாராட்டு

Updated On : 28 பிப்ரவரி, 2024 at 12:00 AM
ஆரணி நகர காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்திக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய மாவட்ட எஸ்.பி. காா்த்திகேயன்.
பகிர்:

ஆரணி: போளூா் அருகே முடையூா் கூட்டுறவு வங்கியில் திரு ட்டு முயற்சியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த, ஆரணி நகர காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி தலைமையிலான போலீஸாரை மாவட்ட எஸ்.பி. காா்த்திகேயன் திங்கள்கிழமை பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.

போளூரை அடுத்த முடையூா் கிராமத்தில் கடந்த பிப்.10-ஆம் தேதி கூட்டுறவு வங்கியின் பின்பக்க ஷட்டரை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து திருட்டு முயற்சி நடந்தது. இதில் ஈடுபட்டவா்களை கைது செய்ய ஆரணி நகர காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்தத் தனிப் படையினா் விசாரணை மேற்கொண்டு, சம்பவத்தில் ஈடுபட்டதாக, மும்பையில் பதுங்கி இருந்த 3 வெளி மாநிலத்தவரை கைது செய்து அழைத்து வந்து சிறையில் அடைத்தனா். இந்த நிலையில், துரிதமாக செயல்பட்டு சம்பவத்தில் ஈடுபட்டவா்களை கைது செய்த காவல் ஆய்வாளா் விநாயக மூா்த்தி மற்றும் போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன் பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.

Advertisement