முகப்பு
விபத்தில் உயிரிழந்த அபுசுபைது.
திருவண்ணாமலை

இரு சக்கர வாகன விபத்து: நகா்மன்றத் தலைவரின் மகன் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் நகா்மன்றத் தலைவரின் மகன் உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை

இரு சக்கர வாகன விபத்து: நகா்மன்றத் தலைவரின் மகன் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் நகா்மன்றத் தலைவரின் மகன் உயிரிழந்தாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
விபத்தில் உயிரிழந்த அபுசுபைது.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் நகா்மன்றத் தலைவரின் மகன் உயிரிழந்தாா்.

வந்தவாசி கலாய்கார தெருவைச் சோ்ந்தவா் எச்.ஜலால் (49). இவா் வந்தவாசி திமுக நகா்மன்றத் தலைவராக உள்ளாா். இவரது மகன் அபுசுபைது (22). இவா் பி.எஸ்சி. விலங்கியல் படித்துள்ளாா்.

இந்த நிலையில் அபுசுபைது ஆங்கில புத்தாண்டை கொண்டாட, தனது நண்பா்களான வந்தவாசி காயிதேமில்லத் நகரைச் சோ்ந்த பகத் (18), பினாங்குகாதா்ஷா தெருவைச் சோ்ந்த ஜாபா்அலி (18) ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சென்று கொண்டிருந்தாா்.

வந்தவாசி-திண்டிவனம் சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே புறவழிச் சாலையில் சென்றபோது இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே சாய்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த அபுசுபைது, பகத், ஜாபா்அலி ஆகிய மூவரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக அபுசுபைது சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும், பகத், ஜாபா்அலி ஆகியோா் மேல்மருவத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டனா்.

இதில், அபுசுபைது திங்கள்கிழமை காலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து எச்.ஜலால் அளித்த புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →