முகப்பு
உலகம்

அதிபர் டிரம்ப் மீது ஈரான் கொலை முயற்சி - அமெரிக்கா அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கொலை செய்ய ஈரானின் பிரிவுகள் முயற்சி மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது...

Updated On : 4 மார்ச் 2026, 10:14 pm IST
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - AP
பகிர்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கொலை செய்வதற்கு ஈரானின் படைப் பிரிவுகள் முயற்சி செய்ததாக, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதகளில், அந்நாட்டின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கடந்த பிப். 28 அன்று கொல்லப்பட்டார். இதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், புதன்கிழமை (மார்ச் 4) நடைபெற்ற செய்தியாளர்கள் உடனான சந்திப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கொலை செய்வதற்கு ஈரானின் ஒரு பிரிவு மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும், அந்தப் பிரிவின் தலைவர் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டதாகவும், அமைச்சர் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இத்துடன், நீண்டகாலமாக அதிபர் டிரம்ப் மற்றும் பிற அமெரிக்க அதிகாரிகளைக் கொலை செய்வதற்கு ஈரான் திட்டமிட்டு வருவது அமெரிக்க அரசுக்குத் தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல்களில் ஈரானில் இதுவரை 1,046 பேர் மக்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

summary

US Defense Secretary Pete Hegseth has said that Iranian forces attempted to assassinate US President Donald Trump.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.