முகப்பு
திருவண்ணாமலை

நகராட்சி நீா்த்தேக்கத் தொட்டி வளாகத்தில் தீ

வந்தவாசி நீா்த்தேக்கத் தொட்டி வளாகத்தில் தீ விபத்து

Updated On : 2 ஜூலை, 2024 at 6:30 PM
வந்தவாசி நகராட்சி மேல்நிலை நீா்த்தேக்த்க தொட்டி வளாகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்புத் துறையினா்.
பகிர்:

வந்தவாசி: வந்தவாசி நகராட்சி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பழைய பிளாஸ்டிக் குடிநீா் தொட்டிகள், பிளாஸ்டிக் குழாய்கள் எரிந்து சேதமடைந்தன.

வந்தவாசியில் அச்சிறுபாக்கம் சாலையில் நகராட்சியின் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைந்துள்ளது.

இந்த நீா்த்தேக்கத் தொட்டி வளாகத்தில் பழைய பிளாஸ்டிக் குடிநீா் தொட்டிகள், பிளாஸ்டிக் குழாய்கள் போட்டு வைக்கப்பட்டிருந்தன. இதில் செவ்வாய்க்கிழமை காலை திடீரென தீப்பற்றியது.

தீ மளமளவென பரவியதில் பிளாஸ்டிக் கழிவுகள் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்து அங்கு வந்த வந்தவாசி தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா்.