திருவண்ணாமலை

விவசாய நிலத்துக்குச் செல்லும் சாலையில் ஆக்கிரமிப்புகள்

செங்கம் அருகே விவசாய சாலை ஆக்கிரமிப்பால் விவசாயிகள் அவதி

Din

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே விவசாய நிலத்துக்குச் செல்லும் சாலை ஆக்கிரமிப்புகளால் குறுகிப் போயுள்ளது.

செங்கத்தை அடுத்த கட்டமடுவு கிராமத்தில் இருந்து வேடியப்பன் கோயில் செல்லும் சாலை உள்ளது.

இவ்வழியாகத் தான் விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களுக்குச் செல்லவேண்டும்.

இந்த நிலையில், சாலை தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குறுகிய நிலையில் உள்ளது. மேலும், அப்பகுதியில் வீடு, கட்டடங்கள் கட்டுவதற்கு ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் விளை நிலங்களுக்கு விவசாயக் கருவிகளை எடுத்துச் செல்லமுடியவில்லை.

கரும்பு, நெல் போன்றவற்றை லாரியில் ஏற்றிச் செல்ல முடியாத நிலை உள்ளது.

இதனால் அந்தச் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள், விவசாயிகள் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மனு மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

குதூகலம்... ஜனனி அசோக்குமார்!

காஸாவின் அவல நிலை: பாலஸ்தீன குடும்பங்களுக்கு கல்லறைகளே வசிப்பிடம்!

மஞ்ச சிவப்பழகி... ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

“ பழைய Print! புதிய படமாக ஓடாது!” டிடிவி குறித்து ஆர்.பி.உதயகுமார்

ஆயிஷா... ரகுல் பிரீத் சிங்!

SCROLL FOR NEXT