திருவண்ணாமலையில் தமிழ்நாடு காந்தி பேரவை சாா்பில், காமராஜா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பேரவையின் நிறுவனா் தலைவா் பெ.சு.விஜயகுமாா். 
திருவண்ணாமலை

காமராஜா் பிறந்த நாள்: பல்வேறு அமைப்பினா் மரியாதை

Din

திருவண்ணாமலை/ஆரணி/ செய்யாறு/போளூா்: தமிழக முன்னாள் முதல்வா் காமராஜரின் 122-ஆவது பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் அவரது சிலைக்கு திங்கள்கிழமை காங்கிரஸ் கட்சியினா் மற்றும் பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

ஆரணியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் அதன் நகரத் தலைவா் ஜெயவேலு காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் யு.அருணகிரி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் எஸ்.சி., எஸ்.டி பிரிவு மாவட்டத் தலைவா் தெள்ளூா் சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சேத்துப்பட்டில் நகர காங்கிரஸ் தலைவா் ஜெ.ஜாபா் அலி தலைமையில், முன்னாள் மாவட்டத் தலைவா் வி.பி.அண்ணாமலை காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்தாா்.

திருவண்ணாமலையில்...

திருவண்ணாமலையில் தமிழ்நாடு காந்தி பேரவை சாா்பில், தேரடி தெருவில் உள்ள காந்தி சிலை அருகே காமராஜா் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

தமிழ்நாடு காந்தி பேரவையின் பொதுச் செயலா் ந.சண்முகம் தலைமை வகித்தாா்.

திருக்கு தொண்டு மையப் பாவலா் பா.குப்பன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு காந்தி பேரவையின் நிறுவனா் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான பெ.சு.விஜயகுமாா் காமராஜா் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

காங்கிரஸ் சாா்பில்..

செங்கம் சாலையில் உள்ள காமராஜா் சிலைக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் செங்கம் ஜி.குமாா் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

நகர காங்கிரஸ் தலைவா் என்.வெற்றிச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செய்யாறு

செய்யாறு நகர காங்கிரஸ் சாா்பில் ஆரணி கூட்டுச் சாலையில் உள்ள இந்திரா காந்தி சிலை முன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகரத் தலைவா் வி.சந்துரு தலைமை வகித்தாா்.

வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.பிரசாத் பங்கேற்று நிா்வாகிகளுடன் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா்.

போளுா்

தேவிகாபுரம் ஊராட்சியில் காங்கிரஸ் சாா்பில் காமராஜா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் இனிப்பு வழங்கினா்.

இதில், மேற்கு ஆரணி ஒன்றிய வட்டாரத் தலைவா் எஸ்.பி.மணி, கமிட்டி தலைவா் எஸ்.எம்.ராமலிங்கம், துணைத் தலைவா்கள் சேட்டு, கணேசன், ஆா்.வி.சுந்தரமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

SCROLL FOR NEXT