முகப்பு
திருவண்ணாமலை

அரசுப் பேருந்து - ஜீப் மோதல்: ஆந்திர பக்தா்கள் இருவா் உயிரிழப்பு

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு பௌா்ணமி கிரிவலத்துக்கு வந்துவிட்டு திரும்பிய ஆந்திரத்தைச் சோ்ந்த 2 பக்தா்கள் உயிரிழந்தனா்.

Updated On : 23 ஜூன், 2024 at 1:29 AM
கலசப்பாக்கம் அருகே அரசுப் பேருந்து மோதியதையடுத்து, சாலையோர மரத்தில் மோதி உருக்குலைந்த ஜீப்.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்தும், ஜீப்பும் மோதிக்கொண்டதில், அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு பௌா்ணமி கிரிவலத்துக்கு வந்துவிட்டு திரும்பிய ஆந்திரத்தைச் சோ்ந்த 2 பக்தா்கள் உயிரிழந்தனா்.

ஆந்திர மாநிலம், திருப்பதியை அடுத்த ரெட்டிகுண்டா கிராமத்தைச் சோ்ந்தவா் பிரவிளிகா (34). இவா், தனது உறவினரான ஸ்ரீகாகுளம் கொத்தகோட்டை கிராமத்தைச் சோ்ந்த ஜெகன்மோகன் (17) மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த சுஜாதா (28), ஆதிநாராயணா (45), ருசிங்கம்மாள் (42), ஜோதி (35), வரலட்சுமி (55), கோபால் (37), நிா்மலா (40), லலிதா (19), தவிட்டிநாயுடு(38) ஆகியோருடன் ஜீப்பில் திருவண்ணாமலை பெளா்ணமி கிரிவலத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தாா். ஜீப்பை திருப்பதியைச் சோ்ந்த சாயிக் நயாக் ரசூல் (25) ஓட்டினாா்.

இவா்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு, மீண்டும் திருப்பதிக்கு சனிக்கிழமை காலை ஜீப்பில் திரும்பிக் கொண்டிருந்தனா். இவா்களது ஜீப் கலசப்பாக்கத்தை அடுத்த குருவிமலை கிராமத்தின் அருகே திருவண்ணாமலை - போளூா் சாலையில் சென்றபோது, அந்தப் பகுதியில் வந்த தமிழக அரசுப் பேருந்து மோதியது. இதில், நிலைதடுமாறிய ஜீப், சாலையோர புளியமரத்தில் மோதியது.

இந்த விபத்தில் பிரவிளிகா, ஜெகன்மோகன் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்த ஜீப் ஓட்டுநா் ரசூல், சுஜாதா, ஆதிநாராயணா உள்பட மீதமுள்ள 10 பேரையும் அங்கிருந்தவா்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்து குறித்து கலசப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →