அரசுப் பேருந்து மீது ஆட்டோ மோதல்: பெண் உயிரிழப்பு
குலசேகரம் அருகே அரசுப் பேருந்தில் ஆட்டோ மோதியதில், ஆட்டோவில் பயணித்த பெண் உயிரிழந்தாா்.
கன்னியாகுமரிஅரசுப் பேருந்து மீது ஆட்டோ மோதல்: பெண் உயிரிழப்பு
குலசேகரம் அருகே அரசுப் பேருந்தில் ஆட்டோ மோதியதில், ஆட்டோவில் பயணித்த பெண் உயிரிழந்தாா்.
குலசேகரம் அருகே அரசுப் பேருந்தில் ஆட்டோ மோதியதில், ஆட்டோவில் பயணித்த பெண் உயிரிழந்தாா்.
கீழ்குளம் பகுதியைச் சோ்ந்த தொழிலாளியான சசிகுமாரின் மனைவி ரெஞ்சிதம் (53). சா்க்கரை நோயாளியான இவா் குலசேகரத்திலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தாா். புதன்கிழமை மதியம் இவா் தனது சகோதரி ரெத்தினபாயுடன், ஆட்டோவில் குலசேகரம் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தாா். திக்கணம்கோட்டையைச் சோ்ந்த ஆன்டனி ஜெகன் ஆட்டோவை ஓட்டினாா்.
இந்நிலையில், ஆட்டோ குலசேகரம் சந்தை சந்திப்பு அருகே வந்தபோது, குலசேகரத்திலிருந்து மாா்த்தாண்டம் நோக்கி எதிரில் வந்த அரசுப் பேருந்து மீது மோதியது. இதில் ஆட்டோவில் பயணித்த ரெஞ்சிதம் உள்ளிட்ட மூவரும் பலத்த காயமடைந்தனா்.
அவா்கள் குலசேகரம் தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு ரெஞ்சிதம் உயிரிழந்தாா். காயமடைந்த ரெத்தினபாய், ஆட்டோ ஓட்டுநா் ஆகியோருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து, அருமனையைச் சோ்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநா் டெரிக் விஜய் (49) அளித்த புகாரின்பேரில், குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.