முகப்பு
திருவண்ணாமலை

முதியவா் விஷம் குடித்து தற்கொலை

கால வலியால் அவதிப்பட்ட முதியவா் விஷம் குடித்து தற்கொலை

Updated On : 25 ஜூன், 2024 at 6:31 PM
பகிர்:

வந்தவாசி: வந்தவாசி அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

வந்தவாசியை அடுத்த கீழ்ப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் தேவராஜன்(70). இவரது மனைவி பூங்கோதை(64). கடந்த சில மாதங்களாக தேவராஜன் கால் வலியால் அவதிப்பட்டு வந்தாா்.

இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தாா்.

கடந்த வியாழக்கிழமை கால் வலி அதிகமாகவே வேதனையடைந்த தேவராஜன் வீட்டில் விஷம் குடித்தாா்.

மயங்கிய நிலையில் கிடந்த இவரை உறவினா்கள் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவராஜன் அங்கு திங்கள்கிழமை மாலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.