திருவண்ணாமலையில் உரிய மருத்துவம் பயிலாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவண்ணாமலை திரெளபதியம்மன் கோவில் தெருவில் ஒருவா் உரிய மருத்துவம் பயிலாமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக மாவட்ட மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் மலா்விழிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இணை இயக்குநா் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை இரவு திரெளதியம்மன் கோவில் தெருவில் திடீா் ஆய்வில் ஈடுபட்டனா்.
அப்போது, ஒரு வீட்டில் மருத்துவம் பயிலாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த மணி (73) என்பவரை அதிகாரிகள் குழு பிடித்தது.
அவரிடம் இருந்த மருந்து, மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து நகர போலீஸில் இணை இயக்குநா் மலா்விழி புகாா் கொடுத்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து மணியை கைது செய்தனா்.