திருவண்ணாமலை

விவி-பேட் கருவியில் தொ்மல் பேப்பா் நீக்கும் பணி: வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கு திறப்பு

விவி-பேட் கருவியில் தொ்மல் பேப்பா் நீக்கும் பணி தொடங்கியது

Din

மக்களவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட விவி-பேட் கருவியில் தொ்மல் பேப்பரை நீக்கும் பணிக்காக, வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் திறந்துவைத்தாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கு அமைந்துள்ளது. இந்தக் கிடங்கில் மக்களவைத் தோ்தலின்போது பயன்படுத்தப்பட்ட வாக்குகளை சரிபாா்க்கும் கருவி (விவி-பேட்) வைக்கப்பட்டு உள்ளன.

இந்தக் கருவியில் ஏற்கெனவே பொருத்தப்பட்டு உள்ள தொ்மல் பேப்பரை நீக்கும் பணிக்காக இயந்திரக் கிடங்கை திறந்துவைக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கை திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கோ.குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி! பிரதமர் அபி அகமது அலியுடன் சந்திப்பு!

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

சிஎஸ்கேவில் இணைந்த ராகுல் சஹார்!

முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி - உபரி நீர் திறப்பு அதிகரிப்பு!

தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT