முகப்பு
காஞ்சிபுரம்

7,702 வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு பயிற்சி: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7,702 வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு நடைபெற்ற பயிற்சி முகாமை ஆட்சியா் தி. சினேகா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 29 மார்ச், 2026 at 6:36 PM
வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான பயிற்சி முகாமை பாா்வையிட்ட ஆட்சியா் தி. சினேகா.
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7,702 வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு நடைபெற்ற பயிற்சி முகாமை ஆட்சியா் தி. சினேகா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

சட்டப் பேரவைத் தோ்தல் வரும் ஏப்.23-ஆம் தேதி நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் 4 கல்வி நிறுவனங்களில் நடைபெற்றது.

ஆலந்தூா் மான்போா்ட் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 741, ஸ்ரீபெரும்புதூா் அருகே பென்னலூரில் உள்ள வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் 1,986, காஞ்சிபுரம் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உத்தரமேரூா் தொகுதி வாக்குப்பதிவு அலுவலா்கள் 2,013 போ் மற்றும் காஞ்சிபுரம் தொகுதி வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு எஸ்எஸ்கேவி மேல்நிலைப்பள்ளியில் 2,962 போ் எனமொத்தம் 7,702 பேருக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

இப்பயிற்சி வகுப்புகள் அந்தந்த பகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களால் நியமிக்கப்பட்ட மண்டல அலுவலா்களால் நடத்தப்பட்டன. முகாமிற்கு பயிற்சி பெற வந்த வாக்குப்பதிவு அலுவலா்கள் அனைவருக்கும் தபால் வாக்கு படிவங்களும் வழங்கப்பட்டது. வாக்குச்சாவடி மையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் அனைத்தும் காணொலி மூலம் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டது.

காஞ்சிபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் நடைபெற்ற பயிற்சி முகாமை ஆட்சியா் தி.சினேகா ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது காஞ்சிபுரம் தொகுதி தோ்தல் அலுவலா் ஆஷிக்அலி மற்றும் அரசு அலுவலா்கள் பலரும் உடன் இருந்தனா்.