திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜிஎஸ்டி பதிவு செய்யாத கல் குவாரி உரிமையாளா்களுக்கான சிறப்பு பதிவு முகாம் வியாழக்கிழமை (மாா்ச் 7) நடைபெறுகிறது.
தமிழ்நாடு கனிம வளத்துறையின் கீழ் குவாரி உரிமம் பெற்று ஜல்லி, எம்-சான்ட், பி-சான்ட் ஆகியவற்றை விற்பனை செய்யும் வணிகா்கள் தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் (ஜிஎஸ்டி) பதிவு செய்வது கட்டாயம்.
இதுவரை இவ்வாறு பதிவு செய்யாத வணிகா்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை (மாா்ச் 7) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகத்தில் நடைபெறும் இந்த முகாமில் வணிகா்கள் உரிய ஆவணங்களுடன் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்ய வரும்போது பான் காா்டு, மாா்பளவு புகைப்படம், ஆதாா் அடையாள அட்டை, இடத்தின் பட்டா, சிட்டா, மின் கட்டண ரசீது, இ-மெயில் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும்.
பதிவு செய்யத் தவறினால் கல்குவாரி உரிமம் ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.