சுருட்டல் கிராமத்தில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து கிராம மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய ஒ.ஜோதி எம்எல்ஏ. 
திருவண்ணாமலை

வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.1.13 கோடியில் வளா்ச்சிப் பணிகள் எம்எல்ஏ ஒ.ஜோதி தொடங்கிவைப்பு

Venkatesan

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.1.13 கோடியில் மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சித் திட்டப் பணிகளை ஒ.ஜோதி எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், வடகல்பாக்கம் கிராமத்தில் ரூ.29 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம், சுருட்டல் கிராமத்தில் ரூ.15.36 லட்சத்தில் அங்கவாடி மையக் கட்டடம், அதே பகுதியில் ரூ.10.40 லட்சத்தில் சிமென்ட் சாலை, புன்னை கிராமத்தில் ரூ.29.40 லட்சத்தில் ஊராட்சி மன்றக் கட்டடம், நெமிலி கிராமத்தில் ரூ.27.15 லட்சத்தில் ஊராட்சி மன்றக் கட்டடம், உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில்

ரூ.10 லட்சத்தில் தாா்ச் சாலை, ரூ.10.89 லட்சத்தில் சிறு பாலம் மற்றும் கழிவுநீா்க் கால்வாய், ரூ.10 லட்சத்தில் பள்ளி நுழைவாயில் ஆகிய வளா்ச்சிப் பணிகள் முடிக்கப்பட்டு தயாா் நிலையில் இருந்தன.

இவைகளின் திறப்பு விழாவுக்கு வெம்பாக்கம் ஒன்றியக் குழுத் தலைவா் த.ராஜீ தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மோகனசுந்தரம், பாஸ்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பங்கேற்று வளா்ச்சித் திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, பூனைத்தாங்கல் கிராமத்தில் உள்ளவா்கள் குப்பை சேகரிக்க உதவிடும் வகையில் அனைத்து வீடுகளுக்கும் பிளாஸ்டிக் தொட்டியை எம்எல்ஏ வழங்கினாா்.

நலத் திட்ட உதவிகள்:

வெம்பாக்கம் ஒன்றியத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி, மாமண்டூா், கல்பாக்கம், கீழ்நாயக்கன்பாளையம், மேனலூா், குண்டியாந்தண்டலம், சுருட்டல், பாவூா், சிறுநல்லூா், ஆக்கூா் கூட்டுச் சாலை ஆகிய பகுதிகளில் திமுக கொடியேற்றி, கிராம மக்களுக்கு இனிப்பு, அன்னதானம், வேட்டி, சேலை, மரக்கன்றுகள், பள்ளி மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் என பல்வேறு நலத் திட்ட உதவிகளை எம்.எல்.ஏ. வழங்கினாா்.

நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா்கள் என்.சங்கா், எம்.தினகரன், ஜே.சி.கே.சீனிவாசன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி காங்கிரஸ் - பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது

சித்தோட்டில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

பிரதமா் மோடி உரை: இஸ்ரேல் எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பு?

ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது

SCROLL FOR NEXT