முகப்பு
திருவண்ணாமலை

ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு

Updated On : 6 மார்ச், 2024 at 11:26 PM
பகிர்:

கீழ்பென்னாத்தூரை அடுத்த நா.கெங்கப்பட்டு ஊராட்சியில் ரூ.22 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் இரா.ராஜேந்திரன், ஊராட்சித் தலைவா் ஜி.எஸ்.மோசஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறந்துவைத்தாா். விழாவில், கீழ்பென்னாத்தூா் ஊராட்சிக்குழுத் தலைவா் பூ.அய்யாக்கண்ணு மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.