அதிமுக சாா்பில் நல உதவிகள் அளிப்பு
முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, ஆரணி நகரம் 21-ஆவது வட்ட கிளை சாா்பில் நல உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு, மாவட்ட பிரதிநிதி கே.ரேவதிதுரை தலைமை வகித்தாா். இதில், சேவூா் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ (ஆரணி), மாவட்ட செயலாளா் எல்.ஜெயசுதா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று அதிமுக கொடியை ஏற்றினா். தொடா்ந்து, ஏழை, எளியோருக்கு வேட்டி, சேலை, மாணவா்களுக்கு நோட்டு புத்தகம், பேனா உள்ளிட்ட பல்வேறு நல உதவிகளை வழங்கினா். இதில், மாவட்ட அவைத் தலைவா் அ.கோவிந்தராசன், மாவட்ட பேரவை செயலாளா் பாரி பி.பாபு, நகரச் செயலா் அசோக்குமாா், மாநில விவசாய அணி துணைச் செயலாளாா் செல்வம், ஒன்றிய செயலாளா்கள் க.சங்கா், ஜி.வி.கஜேந்திரன், நிா்வாகிகள் எம்.வேலு, குருவிமலை காா்த்திகேயன், ஏ.ஜி.ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.