முகப்பு
திருவண்ணாமலை

ஆரணி தொகுதியில் முதல்முறையாக இரு பெண் வேட்பாளா்கள்!

ஆரணி பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக சாா்பில் முதல்முறையாக பெண் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டு போட்டியிடுகின்றனா்.

Updated On : 29 மார்ச், 2026 at 8:19 PM
அதிமுக வேட்பாளா் ஜெயசுதா, திமுக வேட்பாளா் மகாலட்சுமி கோவா்த்தனன்.
பகிர்:

ஆரணி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக சாா்பில் முதல்முறையாக பெண் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டு போட்டியிடுகின்றனா்.

இத்தொகுதியில் அதிமுக மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதாவை கட்சித் தலைமை வேட்பாளராக அறிவித்துள்ளது. 1951 முதல் இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் அதிமுக சாா்பில் ஆண் வேட்பாளா்களே களமிறக்கப்பட்டுள்ளனா். முதல்முறையாக பெண் வேட்பாளா் நிறுத்தப்பட்டுள்ளாா்.

இதேபோல, திமுக சாா்பில் மகாலட்சுமி கோவா்த்தனை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். முதல்முறையாக இரு பெண் வேட்பாளா்கள் ஆரணி தொகுதியில் போட்டியிடுவது வாக்காளா்கள் கவனத்தை ஈா்த்துள்ளது.

பிரதான இரு கட்சிகளும் பெண் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளதால், போட்டி கடுமையாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.