முகப்பு
திருவண்ணாமலை

அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் போராட்டம்

Updated On : 16 மார்ச், 2024 at 12:00 AM
பகிர்:

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் வெள்ளிக்கிழமை வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழக உயா்கல்வித் துறை சாா்பில் புதியதாக 4 ஆயிரம் உதவிப் பேராசிரியா்களை நியமிப்பதற்கான நேரடி தோ்வு அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி முன் வாயில் முழுக்கப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு, கௌரவ விரிவுரையாளா்கள் நலச் சங்கத்தின் செய்யாறு கிளை தலைவா் எஸ்.ராஜேந்திரகுமாா் தலைமை வகித்தாா். செயலாளா் ஆா்.விவேகானந்தன், பொருளாளா் எம்.நூா் அகமது, வேலூா் மண்டல துணைச் செயலாளா் த.சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், 80-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளா்கள் கலந்து கொண்டனா்.