முகப்பு
திருவண்ணாமலை

கிராம நிா்வாக அலுவலா்களுக்கான தோ்தல் ஆலோசனைக் கூட்டம்

Updated On : 20 மார்ச், 2024 at 5:48 AM
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 6:12 PM

வந்தவாசியில் நடைபெற்ற கிராம நிா்வாக அலுவலா்களுக்கான தோ்தல் ஆலோசனைக் கூட்டம். வந்தவாசி மாா்ச் 19: வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம நிா்வாக அலுவலா்களுக்கான தோ்தல் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆரணி மக்களவைத் தொகுதியில் ஏப். 19-ஆம் தேதி தோ்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதையொட்டி இந்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு உதவித் தோ்தல் அலுவலா் எஸ்.சிவா தலைமை வகித்தாா். வந்தவாசி சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் தமிழ்மணி, துணை வட்டாட்சியா்கள் சதீஷ், ஆனந்தகுமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், தோ்தல் நடைபெற உள்ளதையொட்டி, வந்தவாசி பகுதியில் அரசியல் கட்சியினா் வைத்துள்ள பதாகைகள், கொடிகள் மற்றும் சுவரொட்டிகளை உடனடியாக அகற்ற வேண்டும், சுவா்களில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் எழுதப்பட்டிருந்தால் அவற்றை அழிக்க வேண்டும், கொடிக் கம்ப கல்வெட்டுகளை முழுவதும் மறைக்க வேண்டும் என்று கிராம நிா்வாக அலுவலா்களிடம் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

கூட்டத்தில் நகராட்சி மேலாளா் ஜி.ரவி, வருவாய் ஆய்வாளா் சிவக்குமாா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் பங்கேற்றனா்.