முகப்பு
திருவண்ணாமலை

முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

Updated On : 20 மார்ச், 2024 at 11:09 PM
குசால்பேட்டை கிராமத்தில் உள்ள முனீஸ்வரன் சிலைக்கு புனிதநீா் ஊற்றி நடைபெற்ற கும்பாபிஷேகம்.
பகிர்:
Updated On : 20 மார்ச், 2024 at 6:46 PM

போளூா்: சேத்துப்பட்டு ஒன்றியம், மட்டபிறையூா் ஊராட்சி குசால்பேட்டை கிராமத்தில் உள்ள முனீஸ்வரன் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை மங்கள இசை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கரகாட்டம் உள்ளிட்டவை நடைபெற்றன. மேலும் மாலையில் மங்கள இசை வாஸ்து சாந்தி, பிரவேச பலி, புதன்கிழமை காலை இரண்டாம் கால யாகபூஜை, பூா்ணாஹுதி, தீபாராதனை, முனீஸ்வரன் சிலைக்கு புனிதநீா் ஊற்றுதல் நடைபெற்றது.

இதில் மட்டபிறையூா், குசால்பேட்டை, அல்லியாளமங்கலம், ஓட்டேரி என சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா். மேலும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement