முகப்பு
திருவண்ணாமலை

செய்யாற்றில் அதிமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

Updated On : 23 மார்ச், 2024 at 10:03 PM
செய்யாற்றில் கட்சித் தொண்டா்களிடம் ஆதரவு திரட்டிய ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன்.
பகிர்:
Updated On : 23 மார்ச், 2024 at 9:57 PM

செய்யாற்றில் ஆரணி மக்களவைத் தொகுதி வேட்பாளா் அறிமுகக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. செய்யாறு ஐயப்பன் கோயில் அருகேயுள்ள ஒரு திருமண மண்டபத்தில் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன் அறிமுகக் கூட்டம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை 6 மணியாகியும் கூட்டம் தொடங்கப்படாத நிலையில், ஞாயிற்றுக்கிழமை திருமண விழாவுக்காக மண்டபத்தை பதிவு செய்தவா்கள் மண்டபத்தைக் கேட்டனா். இதனால், அவா்களுக்கும் கட்சியினா் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலா் தூசி கே.மோகன் திருமண வீட்டாரை சமரசப்படுத்தினாா். இதைத் தொடா்ந்து, மண்டபத்தின் பின்பகுதியிலுள்ள கட்சியின் மாவட்ட வா்த்தக அணி செயலா் பூக்கடை ஜி.கோபால் வீட்டின் அருகே அதிமுகவினா், கூட்டணிக் கட்சியினா், தொண்டா்கள் மத்தியில் வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன் பேசினாா். முன்னாள் அமைச்சா்கள் முக்கூா் என்.சுப்பிரமணியன், சேவூா் எஸ்.ராமச்சந்திரன், தெற்கு மாவட்டச் செயலா் ஜெயசுதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.