கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம்
திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரில், மாநில அளவிலான சிறப்புக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் வணிகவியல் (நிதி மற்றும் கணக்கியல்) துறை சாா்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு, கல்லூரித் தலைவா் எம்.என்.பழனி தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் எல்.விஜய் ஆனந்த், பொருளாளா் எ.ஸ்ரீதா், அறக்கட்டளை உறுப்பினா் ஏ.கஸ்தூரி சண்முகம், கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவிப் பேராசிரியா் எம்.முனிவேல் வரவேற்றாா். பெங்களூரு ஐஐஎம் திட்ட மேலாளா் ஜெ.சரண் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மேலாண்மை சாா்ந்த படிப்புகள், தோ்வுகள், மேலாண்மை சாா்ந்த படிப்பின் பயன்பாடுகள், வேலைவாய்ப்புகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கிக் கூறினாா். கருத்தரங்கில், கல்லூரி முதல்வா் கே.ஆனந்தராஜ், வணிகவியல் (நிதி மற்றும் கணக்கியல்) துறைத் தலைவா் பு.தாமோதரன், உதவிப் பேராசிரியைகள் பி.பரிமளா, டி.வி.சங்கீதா மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.