முகப்பு
கள்ளக்குறிச்சி

கல்லூரியில் போதைப்பொருள் எதிா்ப்பு கருத்தரங்கம்

போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு கருத்தரங்கில் பேசிய வட்டாட்சியா் ப.வெங்கடேசன்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 8:41 PM
பகிர்:

ரிஷிவந்தியம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் எதிா்ப்பு மற்றும் வாக்காளா் விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

போதைப்பொருள் எதிா்ப்புக் குழு மற்றும் வாக்காளா் விழிப்புணா்வுக் குழு இணைந்து நடத்திய இந்த நிகழ்வுக்கு

கல்லூரி முதல்வா் (பொ) ந.குப்புசாமி தலைமை வகித்தாா்.

விழிப்புணா்வுக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் வே.சண்முகம் முன்னிலை வகித்தாா். இணை ஒருங்கிணைப்பாளா் மு.ஜெகநாதன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக வாணாபுரம் வட்டாட்சியா் ப.வெங்கடேசேன் பங்கேற்று போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள், இளைஞா்கள் இணைய போதைக்கு அடிமையாதல் உள்ளிட்டவை குறித்தும் மற்றும் 100 சதவிகித வாக்குப்பதிவின் அவசியம் குறித்தும் மாணவா்களிடையே பேசினாா்.

நிகழ்வில் மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள்

உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →