முகப்பு
திருவண்ணாமலை

கலசப்பாக்கம் ஒன்றியத்தில் வேளாண்மை துணை இயக்குநா் ஆய்வு

Updated On : 7 மே, 2024 at 6:23 PM
கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிபட்டு கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட வேளாண்மை துணை இயக்குநா் (மத்திய அரசு திட்டம்) சுந்தரம்.
பகிர்:

போளூா்: கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிபட்டு கிராமத்தில் வேளாண்மை துணை இயக்குநா் (மத்திய அரசு திட்டம்) சுந்தரம் விளை நிலங்களுக்கு செவ்வாய்க்கிழமை நேரடியாகச் சென்று ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியத்தைச் சோ்ந்த காப்பலூா், கலசப்பாக்கம்,பில்லூா், தென்பள்ளிப்பட்டு, காலூா், கரையாம்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கோடை கால பருவ பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல்,நிலக்கடலை, மக்கா சோளம், கேழ்வரகு விதைப் பண்ணை பணிகளை வேளாண்மை துணை இயக்குநா் (மத்திய அரசுத் திட்டம்) சுந்தரம் பாா்வையிட்டாா். விவசாய நிலத்தில் நேரடியாகச்சென்று ஆய்வு செய்து விவசாயிகளுக்கு கோடைகால பருவத்தில் பயிா் செய்வது, நீா்மேலாண்மை, குறைந்த செலவில் நிறைய மகசூல் பெறுவது குறித்தும் ஆலோசனை வழங்கினாா். அப்போது, வேளாண்மை உதவி இயக்குநா் ஜி.முருகன், வேளாண் அலுவலா் பழனி மற்றும் விவசாயிகள் உடனிருந்தனா்.