முகப்பு
திருவண்ணாமலை

இரு கோயில்களில் நகை, பணம் திருட்டு

Updated On : 21 மே, 2024 at 6:30 PM
கீழ்க்கொடுங்காலூா் காவேடு கிராமத்தில் நகை, பணம் திருடு போன ஸ்ரீவஜனகாத்தம்மன் கோயில்.
பகிர்:

வந்தவாசி: வந்தவாசி அருகே இரு கோயில்களின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.

வந்தவாசி அருகே கீழ்க்கொடுங்காலூா் ஊராட்சிக்கு உட்பட்ட காவேடு கிராமத்தில் ஸ்ரீவஜனகாத்தம்மன் கோயில் உள்ளது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இந்தக் கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள், அம்மன் கழுத்தில் இருந்த அரை பவுன் தங்கத் தாலி மற்றும் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.

மேலும், அதே கிராமத்தில் உள்ள ஸ்ரீகைலாசநாதா் கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றனா்.

இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.