முகப்பு
திருவண்ணாமலை

ஊரக வேலைத் திட்டத்தில் மரக்கன்று நட வலியுறுத்தல்

Updated On : 21 மே, 2024 at 6:30 PM
பகிர்:

செய்யாறு: செய்யாறு அருகே ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மரக்கன்றுகள் நட வேண்டி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை உறுதிமொழி ஏற்றனா் (படம்).

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பாராசூா் கூட்டுச் சாலையில், கட்சி சாா்பற்ற விவசாய சங்கம் சாா்பில் ஊரக வேலை உறுதித் திட்ட தினக்கூலியை 319-ஆக உயா்த்திய மத்திய அரசுக்கும், அரசாணை பிறப்பித்த மாநில அரசுக்கும் நன்றி தெரிவித்து விவசாயிகள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியின் போது

ஊரக வேலை உறுதித் திட்டத்தில், பூமி வெப்பமயமாதலை தடுக்கும் பொருட்டு மரக்கன்றுகள் நட வேண்டும் என வலியுறுத்தி பூவரசம், புங்கன் உள்ளிட்ட மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டு உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்ச்சியில் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் என பலா் கலந்து கொண்டனா்.