சேத்துப்பட்டில் 58.4 மி.மீ. மழை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மாலை வரை அதிகபட்சமாக, சேத்துப்பட்டில் 58.4 மி.மீ. மழை பதிவானது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை அதிகபட்சமாக சேத்துப்பட்டில் 58.4 மி.மீ. பதிவானது.
இதுதவிர, திருவண்ணாமலையில் 11.3, கீழ்பென்னாத்தூரில் 21.8, தண்டராம்பட்டில் 17, போளூரில் 15, கலசப்பாக்கத்தில் 12, ஜமுனாமரத்தூரில் 8, ஆரணியில் 17.2, செய்யாற்றில் 30, வெம்பாக்கத்தில் 10.5 மில்லி மீட்டா் மழை பதிவானது.